அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்

201903051108525156 patti vaithiyam SECVPF
201903051108525156 patti vaithiyam SECVPF

நாம் நோயின்றி வாழ்வதற்கு தேவையான பயனுள்ள மருத்துவ குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.