வெயில் காலத்தில் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதன் அவசியம் !

2017 07 21 15 39 44 363114183
2017 07 21 15 39 44 363114183

வெயில் காலத்தில் கூந்தல் பிசுபிசுப்பாக இருக்கும்.

வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்.

அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு தினமும் எண்ணெய் வைக்க வேண்டும்.

உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.

கூந்தலுக்கு குறைவான அளவு எண்ணெய் பூசுவதால் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான அல்ட்ரா-வயலெட் கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம்.

வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டாம். சிறிது பூசிக் கொள்ளலாம்.

மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணெயை கூந்தலில் பூசுவது அவசியமாகும். இதனால் தலையில் பூஞ்சை வளர்ச்சி தவிர்க்கப்பட்டு தலை சருமம் ஆரோக்கியமாகிறது.