காளானின் மருத்துவ பயன்கள்

Farm enterprises  Mushroom clip image001
Farm enterprises Mushroom clip image001

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், இருக்கும்.

ஆனால் காளான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.