உடல் சூட்டை தணிக்க வேண்டுமா ! இதை பயன்படுத்துங்கள்

1557318443 6479
1557318443 6479

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும்.

இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.

ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. எனவே 2 கோப்பை தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.

1 தே.க வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு கோப்பை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.

இளநீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.