மஹிந்த – மைத்திரி சந்திப்பு தோல்வியில் முடிந்ததாகத் தகவல்!

mahinda ka3E 621x414@LiveMint
mahinda ka3E 621x414@LiveMint

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்rவும் நேற்று முன் தினம் இரவு சந்தித்து நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பது குறித்தே இந்தச்சந்திப்பின்போது கலந்துரை யாடப்பட்டது. எனினும் இந்தப்பேச்சு வெற்றியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்r விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துவிட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் மொட்டுச் சின்னத்துடன் எந்த வகையிலும் இணங்கிச் செயற்பட முடியாது என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் நடத்தப்படும் பேச்சு வெற்றியடையாது போனால், சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என நேற்று முன்தினம் அந்தக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.