வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

download 23
download 23

இயற்கை மருத்துவத்தில் ஒன்று நாம் எடுக்கும் உணவுகள் ஆகும் .

முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

வயிறு பிரச்சனைகள் நீங்கும் :-

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

வயிற்றுப் போக்கு :-

வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவும்.

மாதவிடாய் பிரச்சனைகள் :-

வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இரத்த சோகை :-

உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

தாய்ப்பால் அதிகரிக்கும் :-

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.