இரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று?

rathnapuri
rathnapuri

இரத்தினபுரியில் ஒருவருக்கு கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார்.

சாரதியாக கடமையாற்றி வரும் நபர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவரை ​ஏனைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரது இரத்த மாதிரிகளை கொழும்பில் பரிசோதனைக்குட்படுத்தி அனுப்பிய பின்பே உறுதியான தீர்மானத்துக்கு வரமுடியுமென அவர் மேலும் கூறியுள்ளார்.