இந்திய விமானங்களுக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா!

airindia
airindia

அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இயக்கப்படும் ஏயார் இந்தியாவின் சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது,  “கொரோனா காலத்தில்  அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு  ஏயார் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.  அதற்காக கட்டணங்களை வசூலிக்கிறது.

ஆனால்  இந்தியாவில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் காரணமாக அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி  கிடைப்பது இல்லை. இது சரியான நடைமுறைகள் இல்லை. வேறுபாடு காட்டப்படுகிறது. இதனால்  அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது.

இதனால் ஏயார் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 30 நாள் அமுலில் இருக்கும். விமானங்களை இயக்கப்படுவதற்கு முன்னர்  ஏயார் இந்தியா அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் அமெரிக்க விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு  தடை நீக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.