தினமும் நண்டு சாப்பிட்டு வந்தால் நடக்கும் அதிசயம் என்ன?

625.0.560.370.180.700.770.800.1200.160.90
625.0.560.370.180.700.770.800.1200.160.90

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது.

நண்டில் கனிமச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிக மிக குறைவாக இருக்கிறது.

எனவே இத்தகைய நண்டை டயட்டில் இருப்போர் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

*நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக இருக்கிறது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

*செலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட். செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை குறைக்கும்.

*மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபட்டு விடலாம்.

*நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாத ஒன்றாகும்.

*குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியம் அடையும்

*.பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிட்டு வரலாம். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுத்து விடலாம்.

*நண்டில் கெட்ட கொலஸ்ட்ரோல் இருக்கிறது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக இருக்கிறது

*இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ரோலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரோலை மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைத்து விடும்.நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது.

*இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுத்து விடும்.