கொட்டாவி தொற்று நோயா!

Yawning woman in office
Yawning woman in office
கொட்டாவி விடாத மனிதர்களையே பார்க்க முடியாது,கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயை பெரிதாக திறந்து, மூச்சுக்காற்றை வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே நேரத்தில் செவிப்பறை விரிவடைந்து, நுரையீரலில் இருந்து, பெருமூச்சாக, காற்றை வாய்வழியாக வெளிவிடுவதுமான செயலை குறிக்கிறது.

இப்படி கொட்டாவி விடுவதால், காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால், நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.

நுரையீரல் நுண்ணறையில் உள்ள வளிக்கலங்கள் விரிவடைவதால், பரப்பியங்கி நீர்மம் வெளிப்படுகிறது.

புத்துணர்ச்சியான காற்று உள்ளிழுக்கப்படுவதால், மூளை குளிர்வடைகிறது. கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையில் இருந்து, இயல்பு நிலைக்கு திரும்புவதை தன்னையறியாமல் வெளிகாட்டுவதாலே, கொட்டாவி வருவதாக கூறப்படுகிறது. இப்படி கொட்டாவி வருவது கூட, தொற்று காரணியாகும்.

ஏனெனில் அருகில் இருப்போர் கொட்டாவி விடும் போது, நமக்கும் கொட்டாவி வருவதால், தொற்று வினையாகும். இதையே தான், கிராமப்புறங்களில் குமரி தனியாக போனாலும், கொட்டாவி தனியாக போகாது என்பர். இப்படி கொட்டாவிக்கே தனியாக ஒரு வரலாறு இருக்கிறது.

இருந்தாலும், நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது தான் கொட்டாவி வருகிறது என்றே பலரும் கூறுகிறார்கள். இந்த ஆய்வு, முழுமை பெறாததால், அறிவியல் பூர்வமான தகவல் சேகரிப்பு இன்னும் முழுமை பெறவில்லை.

இப்படி கொட்டாவி விடுவது, இயல்பு நிலையில் இருக்கும் போது எவ்வித பாதிப்புகளும் இல்லை. இதே, வாயை பெரிதாக பிளந்து, சத்தத்துடனும் கூடிய கொட்டாவி அடிக்கடி வந்தால், நுரையீரல் பிரச்னையாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.