மண்பானை பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

paanai

பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண்பானை சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போய்விட்டது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண்பானை சமையல் முறையில் கிடைக்கும் பயன்களை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

மண்பானை சமையல்:

மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாறாமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.

மண்பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்றவை குணமாகிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. நீண்ட ஆயுள் தருகிறது. ஆகையால் நாம் தினமும் மண்பானையில் சமைப்போம்.

மண்பானை குடிநீர் :

மண் பானை குடிநீர் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும் கிடைத்தது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. .

நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன. அந்த தாதுக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கப்படும்.

மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான்.

தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும். பிராண சக்தி அதிகரிக்கும். மண் பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.

முன்னோர்கள் கூறிய மண் பானை பயன்கள் -:

மண்பானை சமையல் அந்த காலத்து முன்னோர்கள் அதிக வயது வரை வாழ்ந்த காரணம் என்ன என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணம் மண்பானையில் சமைத்தது தான் காரணம்.

மண்பாண்டத்தை மட்டும் அந்த காலத்து முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. மண்பானையை போல் பயன் அளிக்ககூடிய பித்தலை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி என்ற ஐந்து வகையான உலோகங்களை சமையல் பாத்திரங்களாக பயன்ப்படுத்தி உள்ளனர்.

அவற்றிலும் வெள்ளிப் பாத்திரங்கள் உடலுக்கு மிக அதிகமாக குளிர்ச்சியை அளிக்கிறது.

நீண்ட ஆயுள் வேண்டுமா?களிமண் பாத்திரங்கள்

நாம் உடலுக்கு அதிகம் நன்மை அளிக்க கூடிய பித்தலை, செம்பு, வெண்கலம் மற்றும் மண்பானைகள் ஆகியவற்றை தினமும் உங்கள் சமையல் பாத்திரங்களாக பயன்படுத்தினாலே போதும். நீண்ட ஆயுள் நமக்கு கிடைக்கும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

மண் பானை பயன்கள் அறிந்து கொண்டீர்களா சரி இனியாவது மண்பானை சமையல் மற்றும் மண்பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.