பகலில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

unnamed 1 9
unnamed 1 9

தூங்காமல் இருப்பது, அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியவை.

மதிய தூக்கம் செயல்திறனை அதிகரிக்கும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. தூக்கம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதிக மனஅழுத்ததில் இருந்தாலோ பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.

பகல் நேர தூக்கத்தில் சில பாதகங்கள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

தினமும் பிற்பகலில் இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் உறங்குபவர்களின் மூளை செயல்திறன் மற்றும் நினைவாற்றல் தூங்காமல் இருப்பவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.

ஆய்வுகளின் படி பகல் நேரங்களில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது 37 சதவீதம் குறைவதாகவும் மேலும் இதய ஆரோக்கியம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கம் என்பது முழுமையான ஓய்வாகும். முழுமையாக தூங்கினால் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். இதனால் கற்பனைத்திறன் அதிகரிக்கும், பழைய நினைவுகளை பாதுகாக்கும். அமைதியான தூக்கம் வெற்றிக்கான சாவியாகும்.

90 நிமிட தூக்கம் அமைதியையும், நிம்மதியையும் அளிக்கிறது. அதிக அளவு கோபம், பயம் மகிழ்ச்சி போன்றவற்றால் நரம்பு மண்டலம் அதிக வேலை செய்யும். நரம்பு மண்டலத்தை அமைதியாக்க சிறு தூக்கம் தூங்கினால் போதும்.