ஊதா நிற உணவுகளில் இவ்வளவு நன்மைகளா!

1472769 419246848202783 96762731 n
1472769 419246848202783 96762731 n

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு என்பது போல், ஊதா நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு தீர்வை கொடுக்கின்றன.

ஊதா நிறத்தில் இருக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி, நோய்களில் இருந்து நம்மை காக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், பிளவனோய்ட்ஸ், தாதுக்கள் தான் காரணமாகும்.

அத்திப்பழம்

பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்த கூடிய பழம் தான் அத்திப்பழம். இது ரத்தசோகை, எதிர்ப்பு சக்தி குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடியவை. எனவே, இதனை தினமும் காலை வேளையில் ஒன்று சாப்பிட்டு வந்தாலே நோய்கள் நம்மை கிட்ட நெருங்காது.

கத்தரிக்காய்

கத்தரிக்காயில் வைட்டமின் கே, சி, பி6, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இதில் இருக்கின்றன. எனவே கத்திரிக்காய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

நாவல்பழம்

நாவல்பழம் பல நன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமாம். எனவே தினமும் நாவல் பழத்தை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

வெங்காயம்

அடர்ந்த ஊதா நிறத்தில் இருக்கக் கூடிய வெங்காயத்தை சமையலில் பயன்படுத்தி, பல நன்மைகளை பெற்று விடலாம். இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கும். எனவே இது இதயம் சார்ந்த நோய்களை தடுக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.

திராட்சை

அடர்ந்த நீல நிறத்தில் இருக்கக் கூடிய திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உள் உறுப்புகளில் வீக்கமோ, பாதிப்போ ஏற்படாது. அத்துடன் எதிர்ப்பு சக்தியை கூட்டி, நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும்.