அஜித்தின் 60வது படத்தின் தலைப்பு வெளியீடு

valimai
valimai

அஜித்தின் 60 படத்தின் தலைப்பை திரைவட்டாரத்திலும், அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த வேளையில் ‘வலிமை’ என வெளியாகிவிட்டது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி பரவலாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் வினோத்தான் இயக்குகிறார். இதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார்.

படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், படத்தின் பூஜை இன்று போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தப்படம் 2020 ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் பெயர்களில் V, வ செண்டிமெண்ட் தொடர்கிறது.

இந்நிலையில் இதுவரை வந்த படங்களில் இதே போல V, வ எழுத்துக்களில் தொடங்கும் அவரின் படப்பெயர்கள் இதோ..

  • வாலி
  • வான்மதி
  • வரலாறு
  • வீரம்
  • வேதாளம்
  • விவேகம்
  • விஸ்வாசம்
  • வலிமை