‘ஹீரோ’ பட டீசரை வெளியிடும் சல்மான் கான்

hero salmankan
hero salmankan

’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ஹீரோ’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் கிறிஸ்மஸ் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் டீசரை அக்டோபர் 24ம் திகதி காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசரை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.