திருமணத்துக்கு தயாராகும் இந்துஜா!

inthuja1
inthuja1

தமிழில் மேயாத மான், மெர்குரி மகாமுனி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா.

திரைப்படங்களை போல் சமூக வலைதளத்திலும் ஆர்வமாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது படப்பிடிப்புக்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு ஏராளமான லைக்குகளும், கருத்துக்களும் குவிந்து வந்தன.

இந்துஜாவின் புகைப்படத்தை பார்த்த நடிகை மகிமா நம்பியார், திருமணம் செய்து கொள்ளலாமா என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள நடிகை இந்துஜா, திருமணம் செய்து கொள்ளலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நடிகை அதுல்யாவும் இந்துஜாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

நடிகை இந்துஜா, மகிமா நம்பியார் மகாமுனி படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.