12,100 மெற்றிக்தொன் அரிசி கையிருப்பில்

anura
anura

சதொச மூலம் நுகர்வோருக்கு பெருமளவில் அரிசி விநியோகிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அனுர பிரியதச்ஷன யாப்பா இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனத்திடம் தற்பொழுது 12,100 மெற்றிக்தொன் அரிசி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 6,500 மெற்றிக்தொன் அரிசி சதொசவிற்கு கிடைக்கவுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் ஊடாக 850 மெற்றிக்தொன் அரிசி விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லை அரிசியாக்கி சதொசவிற்கு வழங்குகின்றது.

அரசாங்கத்தின் நிர்ணய விலையிலும் பார்க்க குறைந்த விலைக்கு சதொச நிறுவனம் அரிசியை விற்பனை செய்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.