சற்று முன்
Home / விளையாட்டு / குல்னா டைகர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

குல்னா டைகர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி போட்டியில் குல்னா டைகர்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் குல்னா டைகர்ஸ் அணி, மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னதாக குல்னா டைகர்ஸ் அணி, 2015-2016ஆம் ஆண்டு பருவக்காலத்திலும், 2018-2019ஆம் ஆண்டு பருவக்காலத்திலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டாக்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குல்னா டைகர்ஸ் அணியும், ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நஜ்முல் ஹொசைன் சான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுகளையும், ரவி பொபாரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் குல்னா டைகர்ஸ் அணி, 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் 80 ஓட்டங்களையும், கம்மூல் இஸ்லாம் 11 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

குல்னா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஆமிர் 6 விக்கெட்டுகளையும், மெயிடி ஹசன் 2 விக்கெட்டுகளையும், சய்புல் இஸ்லாம் மற்றும் ரொபி பிரைன்லின்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, குல்னா டைகர்ஸ் அணி சார்பில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் ஆமிர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் குல்னா டைகர்ஸ் அணி, எதிர்வரும் 17ஆம் திகதி டக்கா மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் தோல்வியடைந்த ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி, முதலாவது வெளியேற்று சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியுடன் இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதி போட்டியில் நாளை டக்கா மைதானத்தில் மோதவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவின் சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி இத்தாலியில் இருந்து மீண்டும் ...