தேசிய ரீதியில் பதக்கம் பெற்று சாதனை படைத்த முல்லைத்தீவு இளைஞன்

IMG 20221128 WA0139
IMG 20221128 WA0139

இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய பளு தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த  மாணவன் சாதனை படைத்துள்ளார்.

IMG 20221128 WA0138


வடமாகண யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் பொலனறுவை சர்வதேச உள்ளக விளையாட்டரங்கில் இம்மாதம் 25, 26, 27 ல் நடாத்திய பளு தூக்கும் போட்டியில் முப்படை வீரர்கள் மற்றும் தென்கிழக்கு வீரர்களுடன் 100 கிலோகிராமிற்குட்பட்ட ௭டை பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு அளம்பில் பகுதியை சேர்ந்த செல்வன் ஜெயதாஸ் அல்வின் அவர்கள் வெள்ளி பதக்கத்தினை வென்று வரலாற்றுச்சாதனை படைத்து எமது வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


இது தொடர்பாக பயிற்றுனரான வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்.நந்தகுமார்  கருத்து தெரிவிக்கையில் இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு பல தசாப்தங்களாகியிருந்தும் இதுவரை தேசிய மட்ட ரீதியில் நடாத்தப்பட்ட யூடோ போட்டியில் வட மாகாணத்தில் இருந்து ஒரு வீரனும் பதக்கம் பெறவில்லை என்றும் முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட யூடோ சங்கத்தின் வாயிலாக தனது பயிற்றுவிப்பினூடாக அவரது அதீத திறமையால் இவ் வெற்றியினை வென்ற வீரனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார் .