சர்வதேச தொழில்முறை குத்துச் சண்டைப்போட்டியில் வடபகுதி வீரர்கள் நான்கு பதக்கம்

IMG 20220412 WA0020
IMG 20220412 WA0020

வடபகுதியிலிருந்து சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி 2022 இந்தியா சென்னை மகரவாயிலில் இடம்பெற்ற போட்டியில் கலந்து கொண்ட வடபகுதி வன்னி பெருநிலப்பரப்பை சேர்ந்த வீரர்கள் இரண்டு தங்கப்பதக்கம் இரண்டு வெள்ளிப்பதக்கம் பெற்று வெற்றியீட்டியுள்ளதாக இன்று (12) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வீரர்களின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார் . 

இலங்கை இந்தியா நாடுகளுக்கிடையே சென்னையில் இடம்பெற்ற சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து சிலாவத்தை முல்லைதீதீவைச் சேர்ந்த ஏனோக் எதியாஸ் கிருஷ்ணவாணி வெள்ளிப்பதக்கம் , புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை சேர்ந்த யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம், தோணிக்கல் வவுனியாவை சேர்ந்த தியாகராஜா நாகராசா வெள்ளிப்பதக்கம் , கூமாங்குளம் வவுனியாவை சேர்ந்த ஸ்ரீகாந்தன் ஸ்ரீதர்சன் வெள்ளிப்பதக்கம் பெற்று வடபகுதிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் . 

இரு பெண் வீரர்களும் இரு ஆண் வீரர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டனர் . எனினும் இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு வடபகுதி வீரர்கள் பல்வேறு நிதிப்பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் ஒரு சிலரின் பங்களிப்பினால் இப்போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளதாகவும் இவ்வாறான வீரர்களுக்கு வடபகுதி மக்கள்தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வீரர்களுக்கு உற்சாகமூட்ட முன்வரவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளனர் .