கராத்தே போட்டியில் வவுனியா வீராங்கனைகள் வெற்றி!

IMG 20220328 WA0024
IMG 20220328 WA0024

கராத்தே போட்டியில் வவுனியா வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

IMG 20220328 WA0025

நிப்பொன் கராத்தே சாம்பியன்ஷிப் – 2022 (NIPPON KARATE CHAMPIONSHIP – 2022) கராத்தே போட்டிகள்  பண்டாரகமவிலுள்ள விளையாட்டு திடலில்  நேற்றயதினம் (27) சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இப்போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியாவை சேர்ந்த மார்ட்டியல் ஆர்ட்ஸ் கழகத்தின் (DINESH MARTIALARTS SCHOOL) வீராங்கனைகள் பங்குபற்றி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வவுனியா மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

IMG 20220328 WA0020

இவ் வீராங்கனைகளிற்கு  ரி.பி.தினேஷ், ஜீ. ஜீவன் ஆகியோர் பயிற்றுவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.