டெல்லி தேர்தல் – வாக்கு பதிவு

freepressjournal 2020 01 c5a74821 4e7c 4cff 8304 a04b335aa40f Delhi electionBanner
freepressjournal 2020 01 c5a74821 4e7c 4cff 8304 a04b335aa40f Delhi electionBanner

இந்தியாவின் டெல்லி சட்ட சபை தேர்தலின் வாக்குப்பதிவுகள் இன்று(08) இடம்பெறவுள்ளது.

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 1 கோடியே 46 இலட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் 13 ஆயிரத்து 750 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வாக்களிப்பு நிலையங்களில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், குறித்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 11 ஆம் அறிவிக்கப்படவுள்ளது.