இந்திய பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை- சிதம்பரம்

108386398 gettyimages 1162879582
108386398 gettyimages 1162879582

இந்திய பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை என முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (10)நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் தொடர்பாக ப.சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரகுராம் ராஜனை அனுப்பிவிட்டீர்கள், அரவிந்த் சுப்ரமணியத்தை அனுப்பி விட்டீர்கள், உர்ஜித் படேலையும் அனுப்பிவிட்டீர்கள். இந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய, பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய எவரும் உங்களுடன் இல்லை.

எதிர்க்கட்சிகளையும் நீங்கள் ஆலோசனை கேட்கமாட்டீர்கள். காங்கிரஸ் கட்சி உங்களுக்கு தீண்டத்தகாத ஒன்றாகிவிட்டது. மற்ற கட்சிகளை நீங்கள் என்ன நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

ஐ.சி.யூ.வில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்க உங்களிடம் வழிகள் இல்லை. சுற்றி நின்றுகொண்டு சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்று கோஷமிட்டால் ஒன்றும் நிகழப்போவதில்லை.

மேலும் ஐ.சி.யூ.வில் இருக்கும் பொருளாதாரம் மீளப் போவதில்லை. திறமையற்ற வைத்தியர்களினால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.