சற்று முன்
Home / உலகம் / மூன்று மதங்களுக்கும் ஒரே கோயில்; ராகவா லாரன்ஸ் கட்டுகிறார்!

மூன்று மதங்களுக்கும் ஒரே கோயில்; ராகவா லாரன்ஸ் கட்டுகிறார்!

மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்டப் போவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தன் தாய்க்கு கோயில் கட்டிய இவர், அறக்கட்டளை மூலமாக ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்ட திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது; “மத வேறுபாடுகளைக் கடந்து, ‘மனிதம்தான் பெரிது’ என்பதை உணர்த்தும் வகையில் மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்ட உள்ளேன்.

மூன்று மதத்தினரையும் பிரிக்க முடியாத வகையில், அவர்கள் ஒன்றாக வந்து வழிபடும் வகையில் இந்தக் கோயில் இருக்கும். நெருப்புக்கும் பசிக்கும் ஜாதி, மதம் கிடையாது. அந்த வகையில், அனைவரும் வந்து சமமாக உணவருந்த, இந்த ஆலயத்தில் அன்னதானக் கூடமும் அமைக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சிரியாவில் தீவிரமடையும் கொரோனா

சிரியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு ...