இலங்கையில் ஒருவரிடமிருந்து 406 பேருக்கு கொரோனா பரவும் அபாயம்!

 குரல்
குரல்

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றிரவு உயிரிழந்த நபருக்கும் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் காணப்பட்டுள்ளமை தொடர்புகள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் நால்வர் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் நேற்றைய தினம் மருதனையில் உயிரிழந்தவர்களின் பேரன் மற்றும் மருமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸினால் இதுவரை இலங்கையில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 124 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

அத்தடன், இன்றைய தினம் புதிதாக நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதோடு சந்தேகத்திற்கிடமான முறையில் 251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சீனப்பெண் உள்ளிட்ட 21 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதோடு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் வழங்கியுள்ள ஆலோசனைகளை பொது மக்கள் பின்பற்ற தவறும் பட்சத்தில் ஒருவரிடமிருந்து 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அவதான மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களுக்கும் நேற்று (01) காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதோடு, மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டது.

குறித்த 19 மாவட்டங்களுக்கும் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டு, அதே தினத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது மற்றும் பொது இடங்களில், பிரதான வீதிகளில் , கிளைவீதிகளில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.