உலக சுகாதார ஸ்தாபனம் புதிய அறிக்கை!

unnamed 7
unnamed 7

உலகெங்கும் தற்சமயம் உள்ள நிலைமையில் தென்கிழக்காசிய நாடுகள் 2030 ஆம் ஆண்டாகும் போது தமது சுகாதாரக் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு தாதிமார் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை சுமார் 1.9 மில்லியனால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

இன்று (7) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணித்தாய் பராமரிப்பு, பிறந்த குழந்தைப் பராமரிப்பு, மருத்துவ சுகாதார ஆலோசனை வழங்கல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரத்துறை வலுவாக்கத்தின் மையப்புள்ளிகளாக தாதிமார் மற்றும் செவிலியர்களே உள்ளனர்.

எனவே அவர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், வலுவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் பூனம் கேட்ரபால் சிங் இதனைத் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடி நிலையில் அவர்களால் ஆற்றப்படும் பணிக்கு எமது மனமார்ந்த நன்றியையும் கூறிக்கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.