சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது!

images 7
images 7

செவனகல காவற்துறை பிரிவிற்குட்பட்ட கிரிப்பத்வேவ பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சந்தேக நபர்கள் கைது.

மேலும் குறித்த சிறுமி பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் 05 பேர் கொண்ட குழு இதனுடன் தொடர்புடையதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தற்போது ஹம்பாந்தொட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இதனுடன் தொடர்புடையதாகவும் அரசியல் தொடர்பில் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.