அனுரவிற்கான இரண்டாவது தெரிவு இல்லை

Jayampathy.Wickramaratne
Jayampathy.Wickramaratne

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷவை தோற்கடிப்பதற்கு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்திருந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது..

அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோத்தாபய ராஜபக்ஷவினாலும், அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளினாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்டு கோத்தாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு அதிகூடிய வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு தமது கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஐக்கிய இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை லால் விஜேநாயக்க ராஜினாமா செய்ததுடன் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி காரியவசம் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.