டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் அதிகளவிலான பங்களிப்பு அவசியம்

Dengue
Dengue

டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் கவனக் குறைவு முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளதாகவும் டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு அதிககளவில் கிடைக்கப்பெறுவது அவசியம் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டிற்கு பின்னர், அதன் அடிப்படை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட டெங்கு நோய் கடந்த 20 வருட காலப்பகுதியில் பெருமளவில் வியாபித்துள்ளது.

டெங்கு நோய் ஒழிப்பிற்கான தேவையான கொள்கையை நடைமுறைப்படுத்தவும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு 10 வருடங்களுக்கு முன்னர் முன்னிலைப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கருத்து தெரிவிக்கையில், உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது. இந்த மன்றங்களும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

1750 சுகாதார பரிசோதகர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களுக்கு உரிய கழிவுப்பொருள் முகாமைத்துவ கட்டமைப்பை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய பொறுப்பாக கருத்திற்கொண்டு தாம் உள்ள வீடு, அலுவலகம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு மக்கள் கூடியளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.