க.வி.விக்னேஸ்வரன் வழங்கிய செய்தி – முழு வடிவம்

cv
cv

குற்றச்சாட்டு என்ற தலைப்பில் ஜே.வி.பி, தமிழ்வின் மற்றும் லங்கா ஸ்ரீ, ஹிரு நியூஸ் போன்ற இணையத்தளங்களில் வெளியாகியுள்ள தவறான செய்தி தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் பின்வருமாறு ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி முழுமையாகப் பிரசுரிக்கப்படவில்லை. அவரால் வழங்கப்பட்ட முழுமையான செய்தி பின்வருமாறு

தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையிலேயே அவர்களுக்கு சில கடப்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் பார்த்தீர்களானால் தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கு வெகுவாகப் பணத்தைக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்ற முறையிலேயே பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு பெருவாரியான பணம் கொடுத்திருக்கின்றார்கள். இதில் சில சில வீதிகளை திருத்துகின்றார்கள். வேறு ஏதேதோ வேலைகள் எல்லாம் செய்கின்றார்கள்.

ஆகவே ஒரு விதத்திலேஅவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் பக்கத்திற்கு இவர்களை இழுத்துவிட்டார்கள் போன்று எங்களுக்கு தெரிகின்றது. எங்களோடு சேர்ந்து ஒருமித்து பயணிப்பதாகத்தான் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இருக்கும் அந்த கடப்பாட்டையொட்டி அவர்கள் அவ்வாறானதொரு தீர்மானத்திலிருந்து விலகி சில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இது எவ்வளவு காலம் அவ்வாறு இருக்கும் என்று என்னால் கூறமுடியாது. வருங்காலமும் எங்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாது விட்டுவிடுமோ என்று எனக்கு தெரியவில்லை. தற்போது இந்த ஐந்து கட்சிகளிலே ஓரிருவர் ஓரே விதமான கருத்தினை எடுத்தியம்பியிருக்கின்ற படியால் மற்றையை மூன்று கட்சிகளும் தங்களுடைய கருத்தை வெளியிடக்கூடும் என்ற விடயத்தை மட்டுமே தெரிவித்திருந்தார் என்பதை இங்கே தெளிவுபடுத்துகின்றோம். தயவு செய்து அவருடைய சரியான செய்தியை முழமையாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்தும்படி மேற்கூறிய இணையத்தளங்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.