தோனியின் பாணியை பின்பற்ற முயற்சிக்க வேண்டாம்-ஜில்கிறிஸ்ட் ஆலோசணை

Rishabh Pant and Adam Gilchrist
Rishabh Pant and Adam Gilchrist

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த விக்கெட் காப்பாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தவர் அடம் ஜில்கிறிஸ்ட். அவருக்கு முன் அவுஸ்திரேலிய அணியின் நீண்ட கால விக்கெட் காப்பாளராக (Wicket Keeper) இருந்தவர் இயன் ஹீலி.

இருந்தாலும் நான் ஹீலியின் பாணியை (Style) பின்பற்ற முயற்சி செய்ததில்லை. அதபோல் ரிஷப் பான்ட் எம்எஸ் தோனியின் பாணியை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என ஜில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில்

என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து நான் சொல்வது, அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த விக்கெட் காப்பாளரான இயன் ஹீலிக்குப் பிறகுதான் நான் வந்தேன். நான் ஹீலியினுடைய பாணியை பின்பற்ற விரும்பியதில்லை. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். நான் ஜில்கிறிஸ்டாக இருக்க விரும்பினேன். இதுதான் ரிஷப் பான்டிற்கு என்னுடைய ஆலோசணை’’ என தெரிவித்துள்ளார்.