சபரிமலை விவகாரம்- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

sabarimala
sabarimala

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தினுள் பெண்களை அனுமதிக்காமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்திருந்தது. பல பெண்கள் அதற்கெதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டிருந்தமையினை அடுத்து அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று 2018ல் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இதற்கெதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் குழு வழங்கிய தீர்ப்பில்,

“பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல,வேறு கோவில்களிலும் மசூதிகளிலும் உள்ளது. மேலும் அனைத்து மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. எனவே இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்விற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது”

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை.

குறித்த தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.