கோத்தாபயவின் குடியுரிமை விவகாரம்- தொடரும் சர்ச்சைகள்!

fake news
fake news

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பிலான சர்ச்சைகள் நீடித்த வண்ணமுள்ளது. உண்மைக்குப் புறம்பான வகையில் காணொளிகளும், அறிக்கைகளும் காண்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருடாந்தம் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்பவர்களின் விண்ணப்பங்கள் அமெரிக்க இறைவரி திணைக்களத்திற்கு கிடைத்து வருகின்ற நிலையில் இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள பதிவேட்டு பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சட்டத்திற்கமைய அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறித்த நாடுகளின் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

இதனை இலங்கை அரசியலமைப்புச் சட்டமும் தெளிவாக தெரிவிக்கின்றது.

இவை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் கோத்தாபயவிற்கெதிராக அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுக்கும்.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டமை தொடர்பிலான காணொளி பரவி வருகின்ற நிலையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை என அமெரிக்க தூரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்க சட்டதுறை திணைக்களத்தால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் கடிதம் தொடர்பில், மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க சட்டதுறை அவை போலியாக தயாரிக்கப்பட்டவை என உறுதிப்படுத்தியுள்ளது.