தமிழர்களை குழப்பிய கழுகு!

kaluku
kaluku

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்ற அரச உத்தியோகத்தர்கள் பலர் கழுகுக்கு வாக்களித்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலானதொகுதிகளில் மூன்றாவது, நான்காவது இடங்கள் கிடைத்துள்ளன.

இதற்கான காரணம் கழுகு சின்னமும் அன்ன சின்னமும் ஒரே விதமாக அமையப் பெற்றமையினை குறிப்பிடலாம்.

தமிழர்கள் சார்பாக போட்டியிட்ட சிவாஜிலிங்கத்திற்கு சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு பிறகு மூன்றாவது பெரும்பான்மை வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போனமை பெரும் ஏமாற்றம் என்றே குறிப்பிடலாம்.

உதாரணமாக யாழ். சாவகச்சேரி தேர்தல் முடிவுகளின் படி,

சஜித் பிரேமதாச – 28007 84.75%
கோத்தபாய ராஜபக்ச – 1775 5.37%
ஆரியவன்ச (கழுகு) 656
சிவாஜிலிங்கம் 377

யாழ். காங்கேசன்துறை தேர்தல் முடிவுகளின் படி,
சஜித் பிரேமதாச – 23773 – 83.2 %
கோத்தபாய ராஜபக்ச – 1688 – 5.91 %
ஆரியவன்ச (கழுகு) 586
சிவாஜிலிங்கம் 475

யாழ். பருத்தித்துறை தேர்தல் முடிவுகளின் படி,
சஜித் பிரேமதாச – 19,931 (82.31%)
கோத்தபாய ராஜபக்ச – 1,848 (7.63%)
ஆரியவன்ச (கழுகு) 431
சிவாஜிலிங்கம் 644 (2.66%)