அத்தநாயக்கவை துரத்தும் சோகம்

Attanayake 1
Attanayake 1

கட்சித்தாவல் என்பது அரசியல் வட்டாரங்களில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகின்றது.

எனினும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு தாவி அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டு அவை நீண்ட காலம் நிலைப்பதற்குள் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற வேளையில் குறித்த அமைச்சரின் மனநிலை எவ்வாறு காணப்படும்.

திஸ்ஸ அத்தநாயக்க கட்சி மாறுகின்ற வேளையில் எதிர்பாராத வகையில் அக்கட்சி தோல்வியடைகின்ற நிலையை காணக்கூடியதாக உள்ளது.

இதனை 2015இல் நடைபெற்ற தேர்தலிலும், 2019இல் நடைபெற்ற தேர்தலிலும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராகப் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்னதாக 2014 டிசம்பர் 8 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சுப் பதவி 2014 டிசம்பர் 11 இல் வழங்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தின் போது கட்சி மாறி அமைச்சுப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் அது நிலைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக குற்றம் சாட்டியதோடு, அவர்கள் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம் என்பதாக ஆவணமொன்றையும் அவர் அப்போது வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டை அப்போது கடுமையாக மறுத்திருந்த ரணில் விக்கிரமசிங்க, தன் மீது குற்றம் சுமத்திய திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு துறையிடம் புகார் அளித்ததற்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் 2019ம் ஆண்டில் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்து கொண்டார்.

இதன்படி, அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்ட கோரிக்கைக்கு இணங்கி செயற்பட தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போல் இம்முறையும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளமையினால் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு மீண்டும் ஒருமுறை சங்கடமான நிலை தோன்றியுள்ளது.