சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை

Sajith 3
Sajith 3

பாராளுமன்றின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படவேண்டும் என கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.