சிறு ஏற்றுமதி பயிர்கள் இறக்குமதி செய்ய தடை

sl
sl

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று நள்ளிரவு (Dec.05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, மிளகு, ஏலம், கறுவா, கராம்பு, சாதிக்காய், உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் மற்றும் பாக்கு, பழப்புளி, இஞ்சி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்தல் மற்றும் மீள் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குப்பைகள் இறக்குமதி மற்றும் மீள்ஏற்றுமதியும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.