- மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
- மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.
- கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் புது மலர்ச்சி ஏற்படும் நாள்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளை உயர்கல்விஉத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
- மகர ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். எதிர்பாராதசெலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து
சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். - கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
- மீன ராசிக்காரர்களுக்கு இன்று கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாளாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.