போதைப் பொருளுடன் இருவர் கைது!

arrest 6
arrest 6

முல்லைத்தீவு, கள்ளப்பாடு தெற்கு பகுதியில் 430 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக இவ்வாறான போதைப்பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கைப்பற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.