மோடி இந்திய குடிமகனா- ஆவணம் கோரி மனுத்தாக்கல்!

modi 1
modi 1

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தைக் கோரி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.