மருத்துவ அறிக்கை – இணையத்தள முற்பதிவின் மூலம் பெற வழிவகை!

http
http

தேசிய போக்குவரத்து மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கு இணையத்தளம் ஊடாக முற்பதிவு செய்வதற்கான புதிய செயற்றிட்டம் இன்று (22) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

புதிய திட்டத்தினூடாக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு செல்லாது, மருத்துவ அறிக்கையை பெறுவதற்கான தினத்தை ஒன்லைன் ஊடாக முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

தாம் பதிவுசெய்யும் நேரத்திற்கு வருகைதந்து மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக் கொள்வதற்கு புதிய திட்டத்தினூடாக பயனாளிகளுக்கு முடியும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை வைத்தியர் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

www.ntmi.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

எதிர்வரும் 27ம் திகதி முதல் இதற்கான முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.