வாசுதேவ நாணயக்கார யாழ் விஜயம்

j
j

முன்னாள் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்றையதினம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை றஜீவ் ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு பத்திரங்களில் வாசுதேவ நாணயக்கார முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளனர்.