தனிமைப்படுத்தலுக்குரிய நோயாகியது ‘கொரோனா’ – சுகாதாரா அமைச்சு அறிவிப்பு

1 ew 2
1 ew 2

கொரோனா வைரஸ் தாக்கத்தை தனிமைப்படுத்தளுக்குரிய நோயாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானியை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வௌியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான சட்டத்தின் ஊடாக அமைச்சுக்குள்ள அதிகாரத்துக்கு அமைய, இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி பயன்படுத்தப்படவுள்ளது.

சுமார் 30 பிரிவுகளை இங்கு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குத் தேவையான மருத்துவக் குழாமை தேசிய வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலிருந்து அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவாக கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.