சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு!

Privete Bus
Privete Bus

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு துறைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாக முடங்கியிருக்கிறது.

அதேபோன்று, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், அரசாங்கம் சில இடங்களுக்கு ஊரடங்கு உத்தரவை குறிப்பிட்ட நேரத்தில் தளர்த்தி மீண்டும் அமுல்படுத்துகிறது.

ஆனால், போக்குவரத்துக்கு சேவைகள் வழமை போன்று முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக தனியார் போக்குவரத்து வாகன சாரதிகளும், நடத்துநர்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, தனியார் பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.