சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றன; அனுரகுமார திசாநாயக்க

Anura Kumara Dissanayake
Anura Kumara Dissanayake

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மகா சங்க மாநாடு கண்டியில் நேற்று(Oct.11) நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க

‘பொருளாதாரத்தின் தன்னிறைவைக் கையகப்படுத்த வேண்டிய செயற்பாட்டை முதலில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொருட்களை இறக்குமதி செய்யவும் கடனை செலுத்தவும் 6 பில்லியன் டொலர்கள் போதுமானது அல்ல. பொருட்களை இறக்குமதி செய்யவோ கடனை செலுத்தவோ கட்டாயமாக 600 கோடி டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், இன்று உண்ணுவதற்கே கடன் பெற வேண்டியுள்ளது.

கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கடன் தரும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்கள் தீர்மானிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் தலைமைகளையும் தூதரகங்களே தீர்மானிப்பதாகக் கூறினார்.