அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்!

maruththuva
maruththuva

இன்று பல வகையான நோய் பெருக்கத்திற்குக் காரணம் சரியான வாழ்க்கை முறை இல்லாததே. அதை இந்தக் கொரோனா வைரஸ் மிகச் சரியாக உணர்த்தியுள்ளது.

அதனால்தான் இன்று பலரும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். உங்களுக்கு நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமெனில் இந்த எளிய வாழ்க்கை முறையைக் கடைபிடியுங்கள் போதும்…

எந்த நோயாக இருந்தாலும் அதை நம்மை அண்டவிடாமல் தடுக்க முதன்மையாக உதவக் கூடியது உண்ணும் உணவுகள்தான். எனவே அதை கவனமாக தேர்வு செய்து சாப்பிடுங்கள்.

பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவுகளை நாடுங்கள். பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி கிடைக்கும்.

நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.

சந்தனத்தையும், பன்னீரையும் உடலில் பூசி வர வேர்க்குரு மறையும்.

பீர்க்கன்காய் வேர் கசாயம் வைத்து குடித்து வர ரத்த சோகை பிரச்சினை சரியாகும்.

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வர பசி நன்றாக எடுக்கும்.

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வந்தால் சேற்றுபுண் 2 நாட்களில் சரியாகிவிடும்.

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் வெட்டுக்காயங்கள் மறைந்து விடும்.

கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டை சளி குணமாகும்.

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் சாப்பிட்டு வர தும்மல் நிற்கும்.

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரை இருக்கும் இடத்தில் பூசி வர படர்தாமரை சரியாகும்.

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

.தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கில் புண்கள் குணமாகும்.