முள்ளங்கி கீரையின் மருத்துவ நன்மைகள்

1639461370 8218
1639461370 8218

முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை. முள்ளங்கிக் கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம்.


முள்ளங்கி கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி கீரைக்கு உண்டு.

கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை முள்ளங்கி கீரை குணப்படுத்தும். முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.