அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் ஜாதிக்காய் !!

nutmeg 1570195845
nutmeg 1570195845

ஜாதிக்காய் கொட்டை, ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ ஜாதிப்பத்திரி, அதன் மேல் ஓடு என அனைத்தும் உணவிலும், மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். விந்து கெட்டிப்படும், உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.

ஜாதிக்காய் தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.

ஜாதிக்காயை பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.