14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தந்தையான நரேன்!

FiWNV6uUYAAgrJ9
FiWNV6uUYAAgrJ9

மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் நரேன். அதன்பின்னர் நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை, யு டர்ன், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியன விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

நரேன், கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டு தன்மையா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் 14 வருடத்திற்கு பிறகு நரேன் – மஞ்சு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.