மீண்டும் அஜித்துடன் இணையும் திரிஷா?

Is Trisha acting with Ajith2
Is Trisha acting with Ajith2

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குமுன்பு திரிஷா, அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக அஜித் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.